நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

திங்கள், 18 மார்ச், 2024

இலங்கையில்  நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள்
 எச்சரித்துள்ளனர்.  
இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை தவிர்த்துக்கொள்ள முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர மேற்படி 
அறிவுறுத்தியுள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு 
தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 
தீவிரமடைந்துள்ளது. 
ஆகவே சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை.18-03-2024. நாளை கவனத்திற்குரிய மட்டத்திற்கு 
மேலும் அதிகரிக்கும்.  
இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா 
மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் 
தெரிவித்துள்ளது.  
இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளியில் கடுமையான நடவடிக்கைகளை 
மேற்கொள்ளுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

சனி, 16 மார்ச், 2024

தற்போது  இலங்கையில் நிலவிவரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தோல் எரியும் தன்மையை இங்கு காணலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை ஏற்படுவதாக வைத்தியர்கள்
 குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, தற்போதுள்ள தோல் ஒவ்வாமை அதிகரிப்பு வெப்பமான காலநிலையால்  ஏற்படலாம் என்று நிபுணர்கள் 
சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இளம் பிள்ளைகள் இந்த நோயினால்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

வெள்ளி, 15 மார்ச், 2024

 நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் 15-03-2024.இன்று வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை 
அவதானமாக 
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை
 அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை 
ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
 மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

வியாழன், 14 மார்ச், 2024

யாழ் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். 
கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள 
கையளிக்கப்பட்டது . 
விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதனால் , விடுவிக்கப்பட்ட தமது காணிகள் , வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர். 
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணிகள்  வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி , திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து , பயன்தரு மரங்களை வெட்டுவதுடன் , வீட்டில் காணப்படும் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் , இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை 
களவாடி செல்கின்றனர். 
கதவுகள் ஜன்னல் நிலைகளை களவாடும் போது , வீடுகளையும் சேதமாக்குகின்றனர். 
திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும் , காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரிடம் தாம் கோரிய 
போதிலும் , அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பின்னடிப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

புதன், 13 மார்ச், 2024

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான 
மக்கள் பிரேசிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு
 பயணம் செய்கின்றனர். 
அங்கிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி 
முனையில் மிரட்டி பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். 
அந்த பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பலர் இருந்துள்ளனர். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது.
 இதனிடையே துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு 
ஓடத் தொடங்கினர். 
இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து, பயணிகளை பிடித்து வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர் பேருந்தில் இருந்த பயணிகளை விடுவித்து போலீசிடம் சரணடைந்தார். 
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் சிக்கியிருந்த 17 பேரை
 போலீசார் பத்திரமாக மீட்டனர்.
 காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது

செவ்வாய், 12 மார்ச், 2024

கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​பிரிட்டிஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா
 தடுப்பூசியையும், புரத அடிப்படையிலான நோவாக்ஸ் கோவிட் தடுப்பூசியையும் தயாரித்த இந்தியாவின் புனேவில் உள்ள
 சீரம் இன்ஸ்டிட்யூட்.12-03-2024. இன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது. 
இப்போது அவர்கள் கோவிட் தடுப்பூசிகளைத் தாண்டி மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளனர்.  
அடுத்த சில ஆண்டுகளில் மலேரியா மற்றும் டெங்கு நோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சியை
 சீரம் இன்ஸ்டிட்யூட் தொடங்கியுள்ளது என்று 
சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். 
புதிய தடுப்பூசிகள் தயாரிப்பில் சீரம் இன்ஸ்டிடியூட் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம், தேவை குறைந்ததால் கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைக்க வேண்டியதாயிற்று. 
மேலும் நோய்களுக்கான புதிய தடுப்பூசிகளை தயாரிப்பதன் மூலம், சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசி உற்பத்தி சுமார் 2 1/2 பில்லியன் 
அதிகரிக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி
 பூனாவல்லா கூறுகிறார். 
கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​சீரம் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை
 செலவிட்டது. சீரம் தற்போது ஆண்டுதோறும் சுமார் 1.5 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை விற்பனை செய்கிறது. அதன் உற்பத்தி திறன் சுமார் 4 பில்லியன் அளவுகள். என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது